அமிழ்தினி தனசேகரன் பக்கங்கள் - உங்கள் சென்சார் எவ்வளவு கொள்ளும்....?

 

அமிழ்தினி தனசேகரன் பக்கங்கள்

உங்கள் சென்சார் எவ்வளவு கொள்ளும்....?






அண்ணே,, டீ யை அமுக்கி அமுக்கி ஊத்துங்க,, என்று கடைக்காரரை நாம் கிண்டல் செய்வதுண்டு. அதன் அர்த்தம் டீ நிறைய வேண்டும் என்பதுதான். ஆனால் உண்மையில் டீ யை அவ்வாறு ஊற்ற முடியாது என்பதே உண்மை. எதற்காக இந்த விளக்கம் என்பது கட்டுரையில் முடிவில் நீங்கள் அறிவீர்கள்.

சமீபத்தில் ஒரு நண்பர் தான் எடுக்கும் தனிப்படங்கள் தனது கேமராவில் அதிக தெளிவோடு வருவதாகவும், குழு ஒளிப்படங்கள் தெளிவாக வருவதில்லை என்றும் குறைபட்டுக்கொண்டார். அவரது கேமராவை வாங்கி பார்த்தபோது அவர் எடுத்த குழு ஒளிப்படத்தில் 10,12 நபர்களுக்கு மேல் இருந்தனர். இது உண்மையில் அந்த நண்பரின் குறைபாடு இல்லை. இந்தப்பிரச்சனை கேமராவின் உணரி (Sensor) சார்ந்தது.

படத்தின் தெளிவிற்கு போகஸ், அப்ரேச்சர், சட்டர் வேகம், ஒளியமைப்பு இவைகள் பிரதான காரணமாக இருந்தாலும் இவற்றிற்கு சற்றும் குறையாத பங்கு நம் கேமராவின் உணரிக்கு (Sensor) இருக்கிறது,


படம் 1ல் உள்ள உணரியில் 24 அறைகள் உள்ளன என்று வைத்துக்கொள்வோம். அதில் பதிவதற்கு 24 தகவல்களை ((ஒரு நபரின் முகத்தை மட்டும் அருகில் (closeup) எடுத்தல்)) நாம் தருவதாக வைத்துக்கொண்டால் உணரி எவ்வித சிரமம் இன்றி நமது தகவல்களை மிகத்தெளிவாக பதிவு செய்துகொள்ளும். இங்கு தகவல்கள் என்பதில் படத்தின் வண்ணம், நிற வேறுபாடு (contrast), கூர்மை (sharp) ஆகியவைகள் அடங்கும்.

படம் 2 ல் உள்ள உணரியில் அதே 24 அறைகள் உள்ளன. ஆனால் அந்த உணரியில் பதிவு செய்ய 96 தவகல்களைக் கொடுத்தால் (( ஒரு நபரை தலையிலிந்து கால் வரை எடுத்தல்)) தனது அறைகளுக்குள் சென்சார் அதிக தகவல்களை அடக்கி வைக்க முயற்சிக்கும்போது தகவல்களின் அளவும் தன்மையும் சுருங்கிவிடும்.
படம் 3ல் உண்ண உணரியில் அதே 24 அறைகள் தான். ஆனால் நாம் உணரியில் பதிவு செய்யச்சொல்லி 600 தகவல்களைக் கொடுத்தால் (( 10 நபர்கள் கொண்டு ஒரு குழு படம்)) உணரி டரியல் ஆகிவிடும். அதாவது அனைத்துத் தகவல்களையும் உணரி தன்னிடம் இருக்கும் 24 அறைகளுக்குள் அடக்க முயற்சிப்பதால் தகவல்களின் அளவு தரம் ஆகியவை வெகுவாகச் சுருங்கிவிடும்.

குருநாதா,,,,,,, அப்ப குழு புகைப்படம் எடுக்க என்னதான் வழி என்றால்,,, அதற்கான தீர்வு முழு அளவு உணரியில் (Full Frame Sensor ) இருக்கிறது. ((அதற்கும் மேல் Medium Format என்ற ஒன்று உள்ளது,,, அதன் விலை மிக அதிகம்)) ஏனெனில் முழு அளவு உணரியின் அளவு சிறிய உணரியை (Crop Sensor) விட பெரியது. அதனால் அறைகள் அதிகம் இருக்கிறது. அப்படியெனில் அதிக தகவல்களை முழு தரத்துடன் பதிவுசெய்துகொள்ள முடியும் தானே.

அண்ணே டீ யை நல்லா அமுக்கி அமுக்கி ஊத்துங்க,,,,, இதோ வர்ரேன்,,,
-
அமிழ்தினி ஒளிப்படக்கலையகம்.

நன்றி,



அமிழ்தினி தனசேகரன்
புகைப்படக் கலைஞர்
(குவியம், மனதில் நிரம்பும் ஒளி, உங்கள் கையிலிருக்கும் கேமரா சிறந்தது  ஆகிய நூலின் ஆசிரியர் )

                                                            

கருத்துரையிடுக

0 கருத்துகள்