சேலம் கௌரிஷங்கர் கிருஷ்ணா பக்கங்கள் - Flash Zoom - 001

சேலம் கௌரிஷங்கர் கிருஷ்ணா பக்கங்கள் - 001

Flash Zoom



நண்பர்கள் பல பேர் " Flash Zoom, Flash Zoom ன்னு சொல்றீங்க, நாங்க பொதுவா Umbrella, Softbox ல Studio Light Or Strobelight use பண்ணி எடுப்போம் , அதுல பிளாஷ் அவுட்புட் கண்ட்ரோல் பண்ணிக்குவோம்,, அதென்ன Flash Zoom " ன்னு கேட்டிருந்தாங்க..


நாம ரெகுலரா use பண்ற எல்லா External Flash களிலும் இந்த ஆப்ஷன் இருக்கு.. எப்படி நம்ம லென்ஸ் சை ஜூம் பண்ணியும் Wide பண்ணியும் எடுக்குறோமோ ,அதே மாதிரி Flash லையும் அந்த மாதிரி சில தில்லாலங்கடி வேலை பண்ணலாம்.. சின்ன விஷயம்தான் ப்ளாஷ் zoom function zoom ல ,,,, ம்ம்ம்ம்... 105 mm ன்னு வெச்சுக்குவோம் ,, அப்போ நம்ம பிளாஷ் வெளிச்சம் குறுகலா ,Narrow வா travel பண்ணும்,,, இதே ப்ளாஷ் zoom function wide ல,,,, 28 mm ல பிளாஷ் வெளிச்சம் பரவலா போகும்...


அதனாலேயே Speedlite கள்ல ஒளியை வெச்சு அதிகமா விளையாட முடியும்...Snoot மாதிரியான modifier ங்க இல்லன்னா கூட பிளாஷ் zoom கண்ட்ரோல் ல 200 mm மாதிரி கொண்டு போறப்போ அது snoot மாதிரி செயல்படும்..




நம்ம எல்லா External Flash or Speedlites கள்ல முன்பக்கத்து மேல் பகுதியில ஒரு Diffuser மாதிரியான ஒரு சமாச்சாரம் ஒளிஞ்சிருக்கும் ... அது வெறும் diffuser மட்டுமில்ல ,அதை பயன்படுத்தும்போது பிளாஷ் சோட வெளிச்சம் இன்னும் அதிகப்படியா பரவலா பரவும்....இதுல ஒரு சின்ன விஷயம் வழக்கமான வெளிச்சத்தன்மையை விட கொஞ்சம் வெளிச்சம் குறைவா இருக்கும் அந்த நேரத்துல நம்ம Shutter, Aperture, Iso அதுக்கு தகுந்தமாதிரி வெச்சுக்கவேண்டியதுதான்..







எந்தஎந்த பிளாஷ் zoom ல எப்படியெல்லாம் வெளிச்சம் பரவுதுங்கிறதுக்காகவே இந்த படங்கள்.. நெட்டில் சுட்ட படங்கள் அல்ல ,அனைத்தும் நாம் முயற்சித்த படங்களே..
இப்போ, Flash zoom function பத்தின ஒரு ஐடியா அனைவருக்கும் வந்திருக்கும்ன்னு நம்பறேன்... மேலும் முயற்சிப்போம்,, முயற்சித்ததை பகிருவோம்...

நன்றி,

 
                                                             
                                              சேலம் கௌரிஷங்கர் கிருஷ்ணா
                                                           புகைப்படக் கலைஞர்
                                                                    (MIAMI, U.S.A)


கருத்துரையிடுக

0 கருத்துகள்